அம்பிகை சக்கரவாக பறவையாக வந்து வழிபட்ட தலமாதலால் 'புள்ளமங்கை' என்று அழைக்கப்படுகிறது. புள்-கழுகு, அதனால் கோபுரத்தில் கழுகுகள் உள்ளன. சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்ட தலமாகக் கருதப்படுவதால் 'ஆலந்துறை' என்றும் 'பசுபதி கோயில்' என்றும் அழைக்கப்படுகிறது.
மூலவர் 'ஆலந்தரித்த நாதர்' என்னும் திருநாமத்துடன், அழகிய லிங்க வடிவத்தில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'அல்லியங்கோதை' மற்றும் 'சௌந்தர்ய நாயகி' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.
திருவையாறு 'சப்த ஸ்தானத் தலங்கள்' இருப்பது போல், இத்தலத்திற்கு அருகில் உள்ள 'சக்கரப்பள்ளி' என்னும் ஊரை மையமாக வைத்து 'சப்த மங்கை தலங்கள்' உள்ளன. இந்த ஏழு ஊர்களும் சப்த மாதர்கள் சிவபெருமானை வழிபட்ட தலங்களாகும். அதில் திருப்புள்ள மங்கை தலமும் ஒன்று. தாழைமங்கை, பசுபதிமங்கை, நந்திமங்கை, சூலமங்கை, அரிமங்கை ஆகியவை மற்ற தலங்களாகும். இவை பாடல் பெற்ற தலங்கள் அல்ல.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளர். கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|